InnRow என்ன செய்கிறது
- ஒரே காலண்டர்: எல்லா அறைகளும் எல்லா இரவுகளும் ஒரே திரையில், உங்கள் போனில்.
- டபுள் புக்கிங் இல்லை: புக்கிங் சேவ் ஆனவுடன் அந்த இரவுகள் அந்த அறைக்கு லாக் ஆகும்.
- புக்கிங் தளங்களுடன் சிங்க்: Airbnb, Booking.com, Agoda, MakeMyTrip உடன் காலண்டர் (iCal) சிங்க்.
- செக்-இன்: போன் கேமராவில் ஐடி புகைப்படம், டிஜிட்டல் விருந்தினர் பதிவேடு.
- பில் மற்றும் பணம்: GST இன்வாய்ஸ், அட்வான்ஸ், UPI, ரொக்கம், மீதித் தொகை எல்லாம் ஒரே இடத்தில்.
- ஊழியர்கள்: ஆறு வகை ரோல்கள்; ஒவ்வொருவரும் தங்கள் வேலைக்குத் தேவையானதை மட்டும் பார்ப்பார்கள்.
டபுள் புக்கிங் எப்படித் தடுக்கப்படுகிறது
InnRow-ல் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு இரவுக்கும் தனிப் பதிவு உண்டு. இருவர் ஒரே நேரத்தில் ஒரே அறையை புக் செய்ய முயன்றால் ஒரு புக்கிங் மட்டுமே சேவ் ஆகும்; அறை ஏற்கனவே புக் ஆகிவிட்டது என்று மற்றவருக்கு உடனே தெரியும்.
விருந்தினர் இன்னும் அட்வான்ஸ் அனுப்பவில்லையா? அறையை ஹோல்டில் வையுங்கள். 24 மணி நேரத்தில் அட்வான்ஸ் பதிவு செய்யப்படாவிட்டால் ஹோல்டு தானாக நீங்கி, அறை மீண்டும் புக்கிங்கிற்குத் திறக்கும்.
Airbnb, Booking.com, MakeMyTrip உடன் சிங்க்
ஒவ்வொரு தளத்தின் காலண்டர் (iCal) லிங்கையும் InnRow-ல் சேர்த்து, InnRow-ன் லிங்கை அந்தத் தளத்திலும் சேர்க்கவும். அந்தத் தளங்களின் புக்கிங்குகள் பொதுவாக 15 நிமிடங்களுக்குள் InnRow-க்கு வந்துவிடும். நீங்களே எடுக்கும் புக்கிங்கின் தேதிகளை ஒவ்வொரு தளமும் தன் சொந்த நேர அட்டவணைப்படி படிக்கும்; அதனால் அன்றைய தின புக்கிங்குகளுக்கு InnRow ஒரு "close these dates now" கார்டைக் காட்டும், அந்தத் தேதிகளை நீங்களே தளத்தில் மூடலாம்.
காலண்டர் லிங்கில் தேதிகள் மட்டுமே போகும். கட்டணமும் கமிஷனும் அந்தந்தத் தளத்தின் எக்ஸ்ட்ராநெட்டிலேயே இருக்கும்.
இந்திய விதிகள்: Form C மற்றும் GST
- Form C: ஒவ்வொரு வெளிநாட்டு விருந்தினரின் விவரங்களையும் அவர் வந்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் e-FRRO போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்; 2025 செப்டம்பர் 1 முதல் OCI கார்டு வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர். InnRow நினைவூட்டும், பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை புக்கிங்குடன் வைத்திருக்கும். படிவத்தைப் போர்ட்டலில் நீங்களே நிரப்ப வேண்டும்.
- GST: 2025 செப்டம்பர் 22 முதல் ஒரு இரவுக்கு ₹7,500 வரையிலான அறைக்கு 5% (ITC இல்லாமல்), அதற்கு மேல் 18%. GSTIN சேர்த்தால் InnRow ஒவ்வொரு இரவுக்கும் சரியான GST விகிதத்தைச் சேர்க்கும்.
விரிவாக (ஆங்கிலத்தில்): Form C வழிகாட்டி, ஹோம்ஸ்டே GST.
விலை
- Free: 2 அறைகள் வரை இலவசம், கால வரம்பு இல்லை
- Homestay: மாதம் ₹999 (6 அறைகள் வரை)
- Hotel: மாதம் ₹1,999 (25 அறைகள் வரை)
- ஒவ்வொரு கூடுதல் ப்ராப்பர்ட்டிக்கும்: மாதம் ₹699
GST தனி. புக்கிங் கட்டணமோ கமிஷனோ இல்லை. தொடக்கத்தில் 30 நாட்கள் Hotel பிளான் இலவசம், கார்டு தேவையில்லை.
தொடங்க சுமார் 20 நிமிடங்கள்
- உங்கள் அறைகளைச் சேர்த்து, ஒவ்வொன்றின் வழக்கமான விலையை உள்ளிடுங்கள்.
- Airbnb, Booking.com அல்லது MakeMyTrip காலண்டர் லிங்கை InnRow-ல் பேஸ்ட் செய்யுங்கள்.
- ஊழியர்களுக்குத் தனித்தனி லாகின் கொடுங்கள். கேர்டேக்கர் செக்-இன் செய்யலாம்; பணக் கணக்கை நீங்கள் மட்டும் பார்க்கலாம்.
- + பட்டனை அழுத்தி, தேதியைத் தேர்ந்தெடுத்து, அடுத்த புக்கிங்கை எடுங்கள்.
InnRow ஆப் இப்போது ஆங்கிலத்தில் உள்ளது; தமிழ்த் திரைகள் திட்டத்தில் உள்ளன. மேலும் விவரங்களுக்கு ஆங்கிலப் பக்கத்தைப் பாருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
InnRow மொபைலில் வேலை செய்யுமா?
ஆம். Android-க்கு InnRow ஆப் உள்ளது; உங்கள் InnRow கணக்கில் உள்ள லிங்கிலிருந்து நிறுவ வேண்டும் (இப்போது Google Play-ல் இல்லை). iPhone-ல் Safari-ல் InnRow-ஐத் திறந்து Add to Home Screen செய்யுங்கள்.
2 அறை ஹோம்ஸ்டேக்கு InnRow எவ்வளவு?
இலவசம். Free பிளான் 2 அறைகள் வரை, கால வரம்பு இல்லை. காலண்டர், டபுள் புக்கிங் லாக், புக்கிங் தள சிங்க் எல்லாம் இதில் உள்ளன.
InnRow எனக்காக Form C நிரப்புமா?
இல்லை. Form C-ஐ e-FRRO போர்ட்டலில் நீங்களே நிரப்ப வேண்டும். InnRow நினைவூட்டி, விருந்தினரின் விவரங்களையும் புகைப்படங்களையும் தயாராக வைத்திருக்கும்.
புக்கிங் கட்டணம் அல்லது கமிஷன் உண்டா?
இல்லை. எந்த பிளானிலும் புக்கிங் கட்டணமோ கமிஷனோ இல்லை.